நீட் மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு - சிபிஐ விசாரணை!
பாட்னாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி நீட் தேர்வுக்குப் படித்து வந்த மாணவி உயிரிழந்த சம்பவம், பீகார் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்களை வெடிக்கச் செய்த நிலையில், தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.
பீகாரின் ஜெஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி, பாட்னாவில் உள்ள 'ஷம்பு பெண்கள் விடுதி'யில் தங்கிப் படித்து வந்தார். கடந்த ஜனவரி 6, 2026 அன்று விடுதி அறையில் அவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். ஐந்து நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர், ஜனவரி 11 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் இது தற்கொலை என்று உள்ளூர் போலீசார் கூறினர். ஆனால், அடுத்தடுத்த ஆய்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் காயங்கள் மற்றும் கீறல்கள் இருந்தன. அவர் இறப்பதற்கு முன் கடுமையான போராட்டத்தைச் சந்தித்துள்ளார் என்பதை இது உறுதி செய்தது. மாணவியின் ஆடைகளில் கண்டெடுக்கப்பட்ட தடயங்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதி செய்தன.
போலீஸ் தரப்பில் உண்மைகளை மூடி மறைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து, முதல்வர் நிதிஷ் குமார் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்தார். சிபிஐ தற்போது முறைப்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, பாட்னா போலீசாரிடம் இருந்து ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது.
பாட்னாவில் உள்ள சிபிஐ அதிகாரிகள், வழக்கு தொடர்பான முக்கியத் தடயங்கள் மற்றும் ஆவணங்களுடன் டெல்லி தலைமையகத்திற்குச் சென்றுள்ளனர். விடுதி உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய சுமார் 22 நபர்களிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது. வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டாலும், மாணவியின் பெற்றோர் திருப்தி அடையவில்லை. அவர்கள், "விசாரணையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றால், இது நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் (Judicial Inquiry) நடக்க வேண்டும்" என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!