undefined

சிபிஐ விசாரணையும்.. 2026க்கான ரகசிய ஸ்கெட்ச்சும்... டெல்லி ஆலோசனையில் விஜய்!

 

கடந்த இரண்டு நாட்களாகத் தமிழகத்தின் கவனம் முழுவதும் டெல்லியை நோக்கியே இருந்தது. கரூர் மாநாட்டு விபத்து தொடர்பாகச் சிபிஐ விசாரணையை எதிர்கொண்ட நடிகர் விஜய், விசாரணையைத் தாண்டி டெல்லியில் தங்கியிருந்த நேரத்தில் நடத்திய சில 'முக்கிய சந்திப்புகள்' தமிழக அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

நேற்று (ஜனவரி 12) காலை 11:30 மணிக்குத் தொடங்கிய விசாரணை, சுமார் 7 மணி நேரம் நீடித்தது. "விபத்து நடந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?", "நிகழ்ச்சிக்கு 7 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன்?", "பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே எச்சரிக்கவில்லையா?" போன்ற 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டன. இன்று நடைபெற இருந்த 2-வது நாள் விசாரணை, விஜய்யின் கோரிக்கையை ஏற்றுப் பொங்கல் பண்டிகைக்குப் பின் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணை முடிந்ததும் விஜய் உடனடியாகச் சென்னை திரும்பவில்லை. டெல்லியில் உள்ள ஒரு பிரபல சொகுசு ஓட்டலில் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் மற்றும் சட்ட நிபுணர்களுடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்.

'ஜனநாயகன்' திரைப்படத் தணிக்கை சிக்கல் மற்றும் தேர்தல் சின்னம் பெறுவது குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுடன் விரிவாக ஆலோசித்தார். மிக முக்கியமான விஷயமாக, டெல்லியில் இருக்கும் சில தேசியக் கட்சித் தலைவர்களுடன் விஜய் தரப்பு தொலைபேசியில் பேசியதாகத் தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் விஜய்யுடன் தொடர்பில் இருப்பதாகவும், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டால் காங்கிரஸை தனது பக்கம் இழுக்க விஜய் 'Plan B' ஒன்றை வைத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானால், காங்கிரஸை உள்ளடக்கிய ஒரு வலுவான மூன்றாவது அணியைத் தலைமையேற்று நடத்துவது குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்படி, விஜய் இன்று பிற்பகலில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். பொங்கல் பண்டிகையைத் தனது குடும்பத்துடன் கொண்டாடிய பிறகு, ஜனவரி 19ம் தேதிக்குப் பிறகு மீண்டும் கட்சிப் பணிகளிலும், சிபிஐ விசாரணையிலும் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!