சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு   தேர்வு எழுதாத மாணவர்களுக்கு குட் நியூஸ்... சராசரி மதிப்பெண் அடிப்படையில் ரிசல்ட்!

 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம், அங்குள்ள இந்திய மாணவர்களின் கல்வி வாழ்வையும் புரட்டிப் போட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு இடையே மூண்டுள்ள போரினால் பஹ்ரைன், குவைத், ஓமன், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் சி.பி.எஸ்.சி. பொதுத்தேர்வுகள் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன. கணிதம், அறிவியல் போன்ற முக்கியத் தேர்வுகளை எழுதிய மாணவர்களால், மற்ற பாடத் தேர்வுகளை எழுத முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த இக்கட்டான நிலையில், மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் இன்று (மார்ச் 20, 2026) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, வளைகுடா நாடுகளில் உள்ள மாணவர்கள் மொத்தம் 5 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவர்கள் எழுதிய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட உள்ளன.

அனைத்துத் தேர்வுகளையும் எழுதியவர்கள்: இவர்களுக்கு வழக்கமான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பகுதித் தேர்வுகள் எழுதியவர்கள் (4, 3 அல்லது 2 பாடங்கள்): இவர்கள் எழுதிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரியைக் கொண்டு, எழுதாத பாடங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்.

தனித் தேர்வர்கள்: இவர்களுக்கும் பிரத்யேக மதிப்பீட்டு முறை பின்பற்றப்படும்.

போர் சூழலால் மன உளைச்சலில் இருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்த 'சராசரி மதிப்பெண்'  திட்டம் பெரும் ஆறுதலை அளித்துள்ளது. "எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்களது நோக்கம்; சூழலுக்கு ஏற்ப மிகச்சரியான முறையில் முடிவுகள் அறிவிக்கப்படும்" எனச் சி.பி.எஸ்.சி. நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இந்த புதிய மதிப்பீட்டு முறையினால், மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதில் எவ்விதத் தடையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!