undefined

 CBSE Exam Result 2025... சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது... எப்படி பார்ப்பது?

 
 


சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாணவர்கள் bse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in, எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம்.பொதுவாக, சிபிஎஸ்இ தேர்வுகள் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். 

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 2025ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ தேர்வில் 88.39 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடந்த தேர்வுகளை 16 லட்சத்து 92 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தனர். அதில், 14 லட்சத்து 96 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்தாண்டு 87.98 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்தாண்டு 88.39 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

சிபிஎஸ்இ தேர்வில் 99.6 சதவீத தேர்ச்சியுடன் விஜயவாடா மண்டலம் முதலிடத்திலும் 99.32% சதவீதத்தில் திருவனந்தபுரம் இரண்டாம் இடத்திலும் 97.39 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது