சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ‘மார்க் வெரிபிகேஷன்’ முறை ரத்து!
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உயர்த்தும் நோக்கில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு முதல் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், மதிப்பெண்களை சரிபார்க்கும் (மார்க் வெரிபிகேஷன்) நடைமுறை கைவிடப்படுகிறது.
இதுகுறித்து தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் Sanyam Bhardwaj விளக்கமளித்தார். “மதிப்பெண் கூட்டல் உள்ளிட்ட கணக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகள் காரணமாக, தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் மதிப்பெண் சரிபார்ப்புக்காக விண்ணப்பிப்பது வழக்கமாக இருந்தது.
ஆனால், விடைத்தாள்களை கைகளால் திருத்தும் முறைக்கு பதிலாக கணினி வழியாக டிஜிட்டல் முறையில் திருத்தும் அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மதிப்பீட்டில் ஏற்படும் மனித பிழைகள் பெருமளவில் தவிர்க்கப்படும்.
இதனால், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பின் மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை இனி இருக்காது” என்றார். அதே நேரத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் நடைமுறை தொடர்ந்து கையால் மேற்கொள்ளப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!