சி.பி.எஸ்.இ தேர்வில் சர்ச்சை... வினாத்தாள் QR குறியீடு ஸ்கேன் செய்தால் ஹாலிவுட்  !

 

சி.பி.எஸ்.இ பிளஸ்-2 கணிதத் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றிருந்த QR குறியீடு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. அந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்தபோது கல்வி தொடர்பான தகவல் வருவதற்குப் பதிலாக பிரபல ஹாலிவுட் பாடல் ஒலிபரப்பாகியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில் நடைபெறும் முக்கிய தேர்வில் இத்தகைய தவறுகள் இடம்பெற்றது குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கல்வித்துறையின் தரம் மற்றும் தேர்வு அமைப்பின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சி.பி.எஸ்.இ நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த சம்பவம்  குறித்து  விரைவில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!