பகீர் சிசிடிவி காட்சிகள்... தேசிய பூங்காவில் பிக்கப் வாகனம் மோதி 7 பேர் துடிதுடித்து பலி… 8 பேர் படுகாயம்!
May 3, 2025, 20:20 IST
அமெரிக்காவில் ஐடகோ மாநிலத்தில் ஹென்ரி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு அருகே அமைந்துள்ள தேசிய பூங்கா அருகே பயணிகள் வேன் மற்றும் பிக்கப் வாகனம் மோதி 7 பேர் உயிரிழந்தும், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு மாலை 7:15 மணிக்கு இந்த விபத்து US ஹைவே 20 பாதையில் நடைபெற்றது. இந்த விபத்துக்கு பிறகு இரு வாகனங்களும் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த வழித்தடம் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவின் முக்கிய நுழைவுவழியாக இருப்பதால், இது மிகவும் புறக்கோட்ட சாலையாகக் கருதப்படுகிறது. தற்போது ஐடகோ மாநில காவல் துறையினர் மற்றும் பிரெமாண்ட் கவுண்டி போலீசார் இந்த விபத்திற்கான காரணம் என்னவென்பதைக் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!