காலையிலேயே குவிந்த திரைப்பிரபலங்கள்.. இன்று தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்... மாலை முடிவுகள் வெளியீடு!
சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே தமிழ் திரையுலகினர் ஒன்றுகூடி குவிந்துள்ளனர். சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், ஒரு பொருளாளர், ஓர் இணைச் செயலாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பதவிகளுக்காக 100-க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுத் தேர்தலை நடத்தி வருகிறார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மொத்தம் 1,524 உறுப்பினர்கள் இன்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யத் தகுதி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் இரண்டு முக்கிய அணிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது:
தற்போதைய தலைவர் முரளி ராமசாமி மூன்றாவது முறையாகத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவருடன் டி.டி.ராஜா, சௌந்திரபாண்டியன் உள்ளிட்டோர் நிர்வாகப் பதவிகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்குத் தமிழ்க் குமரன் போட்டியிடுகிறார். இவருடன் ராதாகிருஷ்ணன், கமீலா நாசர், ஆர்கே சுரேஷ் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். இது தவிர, தயாரிப்பாளர் மன்னன், கதிரேசன், ஜேஎஸ்கே சதீஷ்குமார் போன்றோர் சுயேச்சையாகப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இன்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் யார் என்பது தெரியவரும்.
சிறு தயாரிப்பாளர்களின் நலன், பட வெளியீட்டில் உள்ள சிக்கல்கள் மற்றும் பைரசி போன்ற முக்கியப் பிரச்சனைகளைத் தீர்க்கப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக இது பார்க்கப்படுவதால், திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!