undefined

 8-வது ஊதியக் குழு... மத்திய ஊழியர்களுக்கு ஜனவரி முதல் ஊதிய உயர்வு  !

 
 

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த 8-வது ஊதியக் குழு அமைப்பதற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. 7-வது ஊதியக் குழுவின் 10 ஆண்டு காலம் 2025 டிசம்பர் 31-ல் முடிவடைவதை அடுத்து, புதிய ஊதியக் குழுவுக்கான விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை கடந்த அக்டோபரில் ஒப்புதல் அளித்தது. இதற்கான அறிவிப்பை நிதியமைச்சகம் நவம்பர் 3-ம் தேதி வெளியிட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு சம்பளம், ஊதிய படிகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பரிந்துரைகளை வழங்க 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2027 மே அல்லது ஜூன் மாதத்தில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைமுறைப்படி, புதிய ஊதிய அமைப்பு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்ததாகக் கணக்கிடப்படும்.

இந்த மாற்றத்தின் மூலம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000-இலிருந்து ரூ.21,600 முதல் ரூ.26,000 வரை உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், 8-வது ஊதியக் குழு அமலுக்கு வரும் வரை, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!