மயான கொள்ளை விழாவில் தேர் சாய்ந்து விபத்து… 10 பேர் காயம்!
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் 60 அடி உயர தேர் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. பாலாற்றங்கரையில் நடைபெற்ற விழாவில் 10க்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து அம்மன் சிலைகள் அலங்கரித்து தேரில் கொண்டு வரப்பட்டன. சூரையாடல் நிகழ்ச்சி முடிந்த பிறகு, பாலாறு கரையிலிருந்து தேர் சாலைக்கு இழுத்து செல்லும்போது நள்ளிரவு நேரத்தில் திடீரென சமநிலை இழந்து பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் தேரில் இருந்த 10 பேர் சிக்கி காயமடைந்தனர்.
காவல்துறை மற்றும் பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, எஸ்.பி. சிவராமன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விழா குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
விபத்துக்குப் பிறகு சாய்ந்த தேரிலிருந்து அம்மன் சிலை மீட்கப்பட்டு கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு விதிப்படி 12 அடிக்கு மேல் தேர்கள் அமைக்கக் கூடாது என்றாலும், சில கிராமங்களில் 60 அடி உயர தேர்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் 2023ஆம் ஆண்டிலும் தேரு விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!