ரயில் பயணிகளுக்கு இனி ‘டிக் டிக்’ இல்லை… 10 மணி நேரத்துக்கு முன்பே சார்ட்!
ரயில் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு பெரிய நிம்மதி செய்தியை ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இனி ரயில்கள் புறப்படுவதற்கு சராசரியாக 10 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் லிஸ்ட் வெளியிடப்படும். இதனால் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள் கடைசி நேரம் வரை பதற்றத்தில் காத்திருக்கும் நிலை முடிவுக்கு வருகிறது.
இதுவரை ரயில் புறப்பட சில மணி நேரத்திற்கு முன்பே சார்ட் வெளியாகி வந்தது. இதனால் டிக்கெட் கன்பார்ம் ஆகுமா என்ற குழப்பத்தில் பயணிகள் தவித்தனர். கன்பார்ம் ஆகவில்லை என்றால் மாற்று பயண ஏற்பாடுகள் செய்ய முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையை மாற்றவே புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய விதிமுறையின்படி, காலை 5.01 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களின் சார்ட் முந்தைய நாள் இரவு 8 மணிக்குள் தயாரிக்கப்படும். மற்ற நேரங்களில் புறப்படும் ரயில்களுக்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் வெளியாகும். இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ள நிலையில், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!