undefined

சாட் ஜிபிடி செயலியில் இருந்து பயனர்கள் வெளியேற்றம்… புதிய சர்ச்சை!

 

அமெரிக்காவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் உருவாக்கிய உரையாடல் செயலியை பயன்படுத்தி வந்த லட்சக்கணக்கான பயனர்கள் சமீப காலமாக வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் மற்றும் தரவுகள் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயனர்களிடையே பரபரப்பு உருவாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இந்த செயலியை கைபேசியில் இருந்து நீக்கும் பயனர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததாக கூறப்படுகிறது. சில தகவல்களின் படி, செயலியை நீக்கும் விகிதம் 295 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த செயற்கை நுண்ணறிவு சேவையை பயன்படுத்தும் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பலர் மற்றொரு செயற்கை நுண்ணறிவு உரையாடல் சேவைக்கு மாறி வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து அந்த நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!