பொங்கல்–குடியரசு தினம்... சென்னை சென்ட்ரலில் ரயில்களில் அதிரடி சோதனை!
பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘ஆபரேஷன் ஜான் ஜாக்ரன்’ என்ற பெயரில் ரயில்வே போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தினர். எக்ஸ்பிரஸ் ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்டறிவதே இந்த சோதனையின் நோக்கம் ஆகும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தும், புறப்பட்டும் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. பயணிகளின் பைகள், பார்சல்கள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டு, ஆபத்தான பொருட்கள் உள்ளதா என கவனமாக ஆய்வு செய்யப்பட்டது.
இதுபோல் பெரம்பூர், வடக்கு கடற்கரை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு சோதனை குடியரசு தினம் வரை தொடர்ந்து நடைபெறும் என்று ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!