செலான் அபராதம் ஆன்லைனில் எளிதாக செலுத்துவது எப்படி?
சாலை விபத்துகளை குறைப்பதற்காக போக்குவரத்து துறை பல கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வாகன விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இப்போது சில விதிமீறல்கள் டிஜிட்டல் முறையில் கண்டுபிடிக்கப்பட்டு, தகவல் வாகன ஓட்டிகளுக்கு நேரடியாக செல்போனில் அனுப்பப்படுகிறது. அதனால், வாகன ஓட்டிகள் அபராதத்தை அறிந்தவுடன் அதனை உரிய காலத்துக்குள் செலுத்துவது முக்கியம்.
ஆன்லைனில் செலுத்த, Google-ல் "TN e-challan" என்று தேடி மாநில போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செல்லலாம். அல்லது நேரடியாக echallan.parivahan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லலாம். அதில் செலான் எண், வாகன எண் அல்லது ஓட்டுநர் உரிமம் எண் கொண்டு தேடி, கேப்சா உள்ளிட்டு விவரங்களை பார்க்கலாம்.
அந்த விவரங்களில், அபராதத் தொகையை செலுத்தும் விருப்பத்தை கிளிக் செய்து செல்போன் எண் கொடுத்து OTP பெற வேண்டும். பின்னர், யுபிஐ, மொபைல் பேங்கிங், இணையதள பேங்கிங் மூலம் பணம் செலுத்த முடியும். பணம் செலுத்திய பிறகு, e-challan பராமரிப்பு தகவல் வரும். அதே இணையதளத்தில் மீண்டும் உள் நுழைந்து, ரசீதை பிரிண்ட் செய்து சேமிக்கலாம்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!