மும்பை-புனே விரைவு சாலையில் கெமிக்கல் டேங்கர் கவிழ்ந்து விஷ வாயு கசிவு... பெரும் பரபரப்பு!
மும்பை-புனே விரைவு சாலையில் அதோஷி குகைப்பாதை அருகே கெமிக்கல் ஏற்றிவந்த காஸ் டேங்கர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. டேங்கரில் இருந்த ‘புரோப்பிலீன்’ எரிவாயு கசியத் தொடங்கியதால் பெரும் வெடிப்பு அபாயம் ஏற்பட்டு பொதுமக்களில் அதிர்ச்சி ஏற்பட்டது.
போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தை கட்டுப்பாட்டில் கொண்டு, மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்தினால் மும்பை நோக்கிச் செல்லும் பாதை முற்றிலும் மூடப்பட்டு, வாகனங்கள் 2 கிலோமீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையில் திருப்பப்பட்டன.
அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்களில் பயணிகள் உணவு, குடிநீர் இன்றி சாலையில் தவித்து சென்றனர். தற்போது வழி இயல்புபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது; நெடுஞ்சாலை போலீசார் பயணிகளுக்கு விரைவுச் சாலையை தவிர்த்து மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!