அதிசயம்... 27 ஆண்டுகளுக்குப் பின் சென்னையின் 3 முக்கிய ஏரிகள் ஒரே நாளில் நிரம்பின!
சென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. சென்னையின் முக்கிய ஏரிகள் மூன்று ஒரே நாளில் நிரம்பி உள்ளன. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இதனால் சென்னைக்குக் குடிநீர் பற்றாக்குறை இருக்காது. ஒன்றரை ஆண்டுகளுக்குத் தேவையான குடிநீர் ஏரிகளில் நிரம்பியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்கள் மூன்று ஏரிகள். அவை புழல், செம்பரம்பாக்கம், மற்றும் பூண்டி ஏரிகள் ஆகும். இந்த மூன்று ஏரிகளும் இன்று ஒரே நாளில் நிரம்பியுள்ளன. புழல் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். அது தற்போது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி ஆகும். இந்த ஏரியும் இன்று முழுவதுமாக நிரம்பியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். இந்த ஏரியும் டிசம்பர் 12-ம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. கடைசியாக இந்த மூன்று ஏரிகளும் 1998-ம் ஆண்டு ஒரே நாளில் நிரம்பியிருந்தன. இப்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே நாளில் நிரம்பி சாதனை படைத்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!