ஜனவரி8ம் தேதி சென்னையில் 49வது புத்தகக் கண்காட்சி... முதல்வர் தொடங்கி வைப்பு!
ஜனவரி 8 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49வது புத்தகக்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த புத்தகக் காட்சி ஜனவரி 8ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.வாசகர்கள் நுழைய எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. வாசகர்கள் அனைவரும் இலவசமாக காட்சியில் கலந்து கொள்ளலாம் என்று பபாசி அறிவித்துள்ளது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு தருகின்றனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் இந்த கண்காட்சியில் கடந்த ஆண்டு ரூ.20 கோடிக்கு மேல் புத்தக விற்பனை வெற்றி பெற்றது.
இந்த 49வது புத்தக கண்காட்சி 2026 ஜனவரி 7-ம் தேதி தொடங்கி ஜனவரி 19-ம் தேதி வரை மொத்தம் 13 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டைப் போலவே 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச நுழைவு டிக்கெட்டுகள் வழங்கப்படும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரை, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும்.
இந்த திருவிழா இனிதே நடைபெறுவதாக உறுதிசெய்து, நந்தனம் மைதானத்தில் பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நக்கீரன் ஆசிரியர் மற்றும் பபாசி அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவிற்கு முன்னோட்டத்தினை வழங்கினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!