23வது சென்னை திரைப்பட விழாவில் 12 தமிழ்ப் படங்கள் ... டிசம்பர் 11ல் தொடக்கம்!
உலக சினிமாவையும், புதுமையான கதையாடல்களையும் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்குடன் நடைபெறும் 23வது சென்னை திரைப்பட விழாவில் திரையிட 12 தமிழ்ப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திரைப்பட விழா வரும் டிசம்பர் 11 முதல் 18ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த விழா, இந்த ஆண்டும் கவனம் பெறுகிறது.
இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து தமிழக அரசு இந்த திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தேர்வான சிறந்த படங்களுடன், தமிழில் வெளியாகும் தரமான மற்றும் வித்தியாசமான படங்களுக்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு திரையிடப்படும் தமிழ்ப் படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த விழாவில் ‘3 பிஎச்கே’, ‘அலங்கு’, ‘பிடிமண்’, ‘காதல் என்பது பொது உடைமை’, ‘மாமன்’, ‘மாயக்கூத்து’, ‘மெட்ராஸ் மேட்னி’, ‘மருதம்’, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’, ‘பறந்து போ’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வேம்பு’ ஆகிய 12 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. வித்தியாசமான கதைகளும், புதிய முயற்சிகளும் கொண்ட இந்தப் படங்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!