undefined

பயணிகளின் கனிவான கவனத்திற்கு....  சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரூட்டும், நேரமும்  திடீர் மாற்றம்... !

 

 

மதுரை மற்றும் திருவனந்தபுரம் ரயில் கோட்டங்களில் நடைபெறவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் போக்குவரத்தில் அதிரடி மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16128) ஜனவரி 7 முதல் 10 வரை, 12 முதல் 24 வரை மற்றும் ஜனவரி 26, 27 ஆகிய தேதிகளில் வழக்கமான ஆலப்புழா பாதைக்கு பதிலாக கோட்டயம் மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும். இதனால் இந்த ரயில் எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா நிலையங்களுக்குச் செல்லாது என்பதை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயில், ஜனவரி 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது. மறுபுறம், சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் ரயில் ஜனவரி மாதம் முழுவதும் பல்வேறு தேதிகளில் 30 நிமிடம் முதல் அதிகபட்சமாக 2 மணி நேரம் 15 நிமிடம் வரை தாமதமாகச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனவரி 20, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பயணம் தாமதமாகும் என்பதால் பயணிகள் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

மேலும், மதுரை கோட்டப் பணிகள் காரணமாக குருவாயூர் - சென்னை ரயில் ஜனவரி 1 முதல் 30 வரை (குறிப்பிட்ட சில தேதிகள் தவிர) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். இந்தத் திடீர் மாற்றங்களால் பயணிகளுக்கு ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க, ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது 'என்.டி.இ.எஸ்' (NTES) செயலியில் ரயில்களின் தற்போதைய நிலையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!