வெறிச்சோடிய சென்னை... கடந்த 5 நாட்களில் 18 லட்சம் பேர் வெளியேற்றம்!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தலைநகர் சென்னையிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துள்ளனர். கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பல்வேறு போக்குவரத்து வசதிகள் மூலம் பயணமாகியுள்ளனர்.
சிறப்பு ரயில்கள் மற்றும் வழக்கமான ரயில்கள் என மொத்தம் 7 லட்சத்து 5 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் நிலையங்கள் மக்கள் கடலாகக் காட்சி அளித்தன.
38,175 சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசுப் பேருந்துகள் மூலமாக 12-ம் தேதி நள்ளிரவு வரை மட்டுமே சுமார் 4.88 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 6 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த 5 நாட்களில் மட்டும் 6,820 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு, அதில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 800 பேர் தங்கள் ஊர்களுக்குச் சென்றுள்ளனர். கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் போன்ற சொந்த வாகனங்கள் மூலம் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!