இடைவிடாத மழை ... மேம்பாலங்களில் கார்களை நிறுத்த தொடங்கிய சென்னை மக்கள்!
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும், அதன் தாக்கம் குறையாமல் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பொழிந்து வருகிறது. சென்னை–மாமல்லபுரம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதால், வட மாவட்டங்களில் இன்று முழுக்கவும் மழை தீவிரமாக தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் சென்னையின் பல தாழ்வான பகுதிகளில் நீர்த்தேக்கம் உருவாகி வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். பொதுமக்கள் அன்றாட செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில சாலைகள் முழுமையாக நீரில் மூழ்கியதால் போக்குவரத்து மந்தமாகியுள்ளது.
மேலும், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். தண்ணீர் தேங்கலாம் என்ற பயத்தால் பலர் தங்களது கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி பாதுகாத்துள்ளனர். வேளச்சேரி, ராயபுரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட மேம்பாலங்களில் கார்கள் நீண்ட வரிசையாக நிற்பது போல அந்தப் பகுதிகள் கார் நிறுத்துமிடமாக மாறியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!