undefined

மப்ளர், குல்லாவுடன் வலம் வரும் சென்னைவாசிகள்... உறைய வைக்கும் பனி!

 

"வெயில் அடிச்சா தாங்க முடியலன்னு திட்டுவோம்... இப்போ வெயிலே வரலையேன்னு கெஞ்சுறோம்!" - இதுதான் இன்றைய சென்னைவாசிகளின் மைண்ட் வாய்ஸ். கடந்த இரண்டு நாட்களாகச் சென்னையும் அதன் புறநகர்பகுதிகளும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களை மிஞ்சும் அளவிற்கு ஜில்லென மாறியுள்ளன. ஃபேன் போடாமல் தூங்க முடியாது என அடம்பிடித்தவர்கள் கூட, இப்போது போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு கிடக்கிறார்கள்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் முல்லைத்தீவு அருகே கரையை கடந்து, தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாகத் தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக அடர்ந்த மேகக்கூட்டங்கள் சென்னையைச் சூழ்ந்துள்ளதால், சூரிய ஒளி தரைப்பகுதியை அடைய முடியாமல் தவிக்கிறது. கடந்த 48 மணி நேரமாகச் சென்னையில் சூரியனைப் பார்ப்பதே அபூர்வமாகி விட்டது. வழக்கமாக இருக்கும் வெப்பநிலையை விடச் சுமார் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைவாகப் பதிவாகியுள்ளது. மதியம் 2 மணிக்கும் அதிகாலை 4 மணி போன்ற குளிரை சென்னைவாசிகள் உணர்கிறார்கள்.

வளிமண்டலச் சுழற்சியால் கடலில் இருந்து வரும் ஈரப்பதம் கலந்த குளிர்ந்த காற்று, நகருக்குள் 'ஏசி' போட்டது போன்ற உணர்வைத் தருகிறது. சமூக வலைத்தளங்களில் 'நாம இருப்பது சென்னை தானா? இல்ல வழிதவறி ஊட்டிக்கு வந்துட்டோமா?' என மீம்ஸ்கள் பறக்கின்றன. மலைப்பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் மப்ளர் மற்றும் தலைக்குல்லாக்கள் இன்று சென்னைச் சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகளின் தலையை அலங்கரிக்கின்றன. சில இடங்களில் மக்கள் நெருப்பு மூட்டி குளிர்காயும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் கணிப்புப்படி, இந்த 'ஜில்' கிளைமேட் நாளையும் தொடர வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்டவசமாக டெல்டா மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு கனமழை இல்லாததால், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் தப்பியுள்ளன. இது விவசாயிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, வரும் ஜனவரி 15-ம் தேதி (பொங்கல்) முதல் மேகங்கள் விலகி, வறண்ட வானிலை நிலவும். அப்போது சூரியன் மீண்டும் தனது வேலையைக் காட்டத் தொடங்குவான் என்பதால், அதுவரை இந்த 'ஊட்டி' சென்னையைக் கொண்டாடுங்கள் மக்களே!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!