undefined

1.91 கோடி குடும்பங்களைச் சந்திக்கும் "உங்க கனவைச் சொல்லுங்க" திட்டம் - இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

 

தமிழகத்தை 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடைய, மக்களின் நேரடிப் பங்களிப்பைப் பெறுவதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். சுமார் 50,000 பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 1.91 கோடி குடும்பங்களை அடுத்த 30 நாட்களுக்குள் நேரில் சந்திப்பார்கள்.

ஒவ்வொரு குடும்பத்தின் 3 முக்கியக் கனவுகள் என்ன என்பது படிவங்கள் மூலம் பெறப்படும். பின்னர், அந்த விவரங்கள் செயலியில் பதிவேற்றப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தனித்துவமான எண்ணுடன் கூடிய 'கனவு அட்டை' வழங்கப்படும். 15 முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்களிடம் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்த 4 சிறப்புக் கேள்விகள் கேட்கப்படும்.

ஜனவரி 11ம் தேதி முதல் இதற்கான இணையதளம் செயல்பாட்டுக்கு வரும். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் தங்கள் கனவுகளை இணையதளம் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் பெறப்படுவதால், அரசுத் திட்டங்கள் தகுதியானவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய இத்திட்டம் உதவும்.

தன்னார்வலர்கள் கொண்டு வரும் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பின், அவை மொபைல் செயலி மூலம் உடனுக்குடன் தலைமைச் செயலகக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும். 2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில், மக்களின் மனநிலையை அறிந்து அதற்கு ஏற்பத் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்யவும், அரசுத் திட்டங்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும் இது ஒரு கருவியாகப் பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!