undefined

இன்று திருச்சி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்... வைகோவின் சமத்துவ நடைபயணத்தை துவங்கி வைக்கிறார்!

 

இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைகிறார் முதல்வர் ஸ்டாலின். விமான நிலையத்திலிருந்து காரில் புறப்படும் முதல்வர், திருச்சி தலைமைத் தபால் நிலையத்திலிருந்து தென்னூர் உழவர் சந்தை திடல் வரை சென்று பொதுமக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று காலை 9  மணிக்கு, மதிமுக வைகோ மேற்கொள்ளும் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டும், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காகவும் வைகோ மேற்கொள்ளும் இந்த நடைபயணம் திருச்சியில் தொடங்கி மதுரையில் நிறைவடைகிறது. இன்று முதல் ஜனவரி 12ம் தேதி வரை திருச்சியில் இருந்து மதுரை வரை சுமார் 180 கி.மீ தூரம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் திமுக கூட்டணி வெற்றிக்கான பரப்புரையாக வைகோ இந்த நடைப்பயணத்தை  மேற்கொள்கிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமத்துவ நடைபயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பின்னர் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!