undefined

நாளை 9,801 பேருக்கு அரசுப் பணி... நியமன ஆணைகள் வழங்கும் முதல்வர் ஸ்டாலின்!

 

தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் இந்த ஆணைகள் வழங்கப்படுகின்றன. பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களே இதில் அடங்குவர். காலிப்பணியிடங்களை நிரப்பும் அரசின் தொடர் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே விழாவில் ரூ.62.50 கோடி மதிப்பீட்டில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மைய கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது. 500 தேர்வர்கள் தங்கிப் பயில நவீன வசதிகளுடன் மையம் அமைக்கப்படுகிறது. “எளிமை ஆளுமை” திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 சேவைகள் எளிமைப்படுத்தப்படுகின்றன. அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான விவரங்களை ஒரே இடத்தில் வழங்கும் “தேர்வுக்களம்” கைபேசி செயலியும் அறிமுகமாகிறது.

மேலும் அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு இணைய தளம் தொடங்கப்படுகிறது. அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடியிருப்புகளும் திறந்து வைக்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. விழாவில் துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!