மகா கும்பமேளா தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் யோகி!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா கடந்த 45 நாட்களாக நடைபெற்று தற்போது நிறைவடைந்த நிலையில், தூய்மைப் பணிகளை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார்.பிரம்மாண்ட ஆன்மிக திருவிழாவான கும்பமேளாவில்45 நாள்களும் பிரயாக்ராஜ் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.உலகம் முழுவதும் இருந்து கும்பமேளாவில் சுமார் 66 கோடி பேர் புனித நீராடிச் சென்றனர். கும்பமேளா நடைபெற்ற இடத்தை தூய்மைப்படுத்தும் பணி இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்வில் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக், அமைச்சர்கள் சுரேஷ் கன்னா, ராகேஷ் சச்சன், நந்த் கோபால் குப்தா நந்தி, அனில் ராஜ்பர், தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங், டிஜிபி பிரசாந்த் குமார் உட்பட பல மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இன்று முழுவதும், பிரயாக்ராஜில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் யோகி கலந்து கொள்கிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!