undefined

முதல்வரின் தஞ்சை பயணம்... 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை.. கலெக்டர் உத்தரவு!

 

தமிழக முதல்வரின் தஞ்சை மாவட்டப் பயணத் திட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை ஜனவரி 26, திங்கட்கிழமை மற்றும் ஜனவரி 28ம் தேதி புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் காலை 6  மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வான்வழி கண்காணிப்புக் கருவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) தியாகராஜன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். முதல்வர் பயணிக்கும் வழித்தடங்கள் மற்றும் தங்கும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் தற்காலிகமாகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தடையை மீறி ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!