undefined

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - தமிழகத்தில் தீவிரமாகும் சிக்குன்குனியா பாதிப்பு! 

 

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சிக்கன் குனியா பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஜாக்கிரதையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வலியுறுத்தி சுகாதாரத் துறை அறிவுறுவுத்தியுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில், நோயைக் கட்டுப்படுத்தப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

கண்டறியப்பட்டுள்ள தரவுகளின்படி, சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது. 

கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத மூட்டு வலி (இது நீண்ட நாட்களுக்குத் தொடரக்கூடும்), தசை வலி மற்றும் உடல் சோர்வு, உடலில் தடிப்புகள் ஏற்படுதல் ஆகியவை சிக்குன்குனியாவின் முக்கிய அறிகுறிகள்:

அரசு மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவிற்கு எனத் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, கொசுவலைகளுடன் கூடிய படுக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும். காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் 'IgM Elisa' பரிசோதனை மூலம் பாதிப்பை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க வாரந்தோறும் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் நீர்நிலைகளில் கொசுப்புழு நாசினிகள் தெளிக்கப்பட உள்ளன. மாவட்ட வாரியாக ஆய்வு: மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாரந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!