ஹாயாக திரியும் சீனா... எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகள் திணறல் !
எண்ணெய் விலை உயர்வு.. உலகம் கவலை, சீனா மட்டும் அமைதி
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பல நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், சீனா மட்டும் பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆய்வாளர்கள் கூறுவதன்படி, ஈரானிடம் இருந்து சீனா பெருமளவில் எண்ணெய் வாங்கி வருகிறது. ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளை பயன்படுத்தி குறைந்த விலையில் எண்ணெயை வாங்கி சேமித்து வைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவசர காலத்துக்காக சுமார் 140 கோடி பீப்பாய்கள் அளவிலான கச்சா எண்ணெய் கையிருப்பாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சீனாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் மீதான சார்பு குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேவையானால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் மாற்று ஏற்பாடுகளும் சீனாவிடம் தயாராக உள்ளன. இதனால் உலக நாடுகள் எண்ணெய் விலை உயர்வால் திணறி வரும் நிலையில் சீனா பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!