ஊழல் குற்றச்சாட்டுக்கள்... 2 சீன ராணுவ தளபதிகள் பதவி நீக்கம்!
சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்த நாட்டின் மத்திய ராணுவ கமிஷன் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த கமிஷனின் கட்டுப்பாட்டில் சீன ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணைப் படை இயங்கி வருகிறது. நாட்டின் பாதுகாப்பு முடிவுகள் அனைத்தும் இந்த அமைப்பின் கீழ் தான் எடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சிஎம்சி துணைத் தலைவராக இருந்த ஜாங் யூக்ஸியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கை சீன அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சிஎம்சி அமைப்பின் பணியாளர் பிரிவு தலைவராக இருந்த லீயு ஜென்ஸியும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து உயர்பதவிகளில் நடவடிக்கை எடுக்கப்படுவது சீன ராணுவத்தில் கடும் மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!