நாளை பெங்களூருவில் விஜய் ஹசாரே கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு அனுமதி மறுப்பு!
நாளை பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் இதனை உறுதிப்படுத்தினார். இதனால் போட்டி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே சிதறியது.
கடந்த ஜூன் 4-ம் தேதி ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, பார்வையாளர்கள் இல்லாமல் விஜய் ஹசாரே போட்டியை நடத்த கர்நாடக கிரிக்கெட் சங்கம் அனுமதி கோரியது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தலைமையில் ஆலோசனையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட குழு மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் போட்டிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என காவல் ஆணையர் தெரிவித்தார். தற்போது வரை சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கு பச்சைக்கொடி இல்லை என்பதே தெளிவாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!