கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!
புதுவருடத்தை வரவேற்க இன்னும் 15 தினங்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் இப்போதே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை களைக்கட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைக் காலங்களில் இரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சேலம் வழியாகத் தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து மங்களூருக்குக் கூடுதல் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சார்லபள்ளி - மங்களூரு ஜங்ஷன் சிறப்பு இரயில் எண் (07267): இந்த இரயில் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி சார்லபள்ளியில் இருந்து இரவு 11.30 மணிக்குக் கிளம்பும். ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 8.23 மணிக்குச் சேலம் வந்து, 8.25 மணிக்கு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக டிசம்பர் 26-ஆம் தேதி காலை 6.55 மணிக்கு மங்களூரு ஜங்ஷனைச் சென்றடையும். மறு மார்க்கம் (07268): மங்களூரு ஜங்ஷனில் இருந்து டிசம்பர் 26-ஆம் தேதி காலை 9.55 மணிக்குக் கிளம்பி, ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 8.40 மணிக்குச் சேலம் வந்து, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக மாலை 5 மணிக்குச் சார்லபள்ளியைச் சென்றடையும்.
சார்லபள்ளி - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு இரயில் எண் (07269): இந்த இரயில் டிசம்பர் 28-ஆம் தேதி சார்லபள்ளியில் இருந்து இரவு 11.30 மணிக்குக் கிளம்பும். ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 8.23 மணிக்குச் சேலம் வந்து, 8.25 மணிக்கு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக டிசம்பர் 30-ஆம் தேதி காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்ட்ரலைச் சென்றடையும். மறு மார்க்கம் (07270): மங்களூரு சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 30-ஆம் தேதி காலை 9.55 மணிக்குக் கிளம்பி, போத்தனூர், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் மாலை 5 மணிக்குச் சார்லபள்ளியைச் சென்றடையும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!