undefined

த்ரிஷா, சிவகார்த்திகேயன், குஷ்பூ என கிறிஸ்துமஸ் பார்ட்டியில் தமிழ்த்திரை நட்சத்திரங்கள்!

 

நடிகை ராதிகா சரத்குமார் நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் சிவகார்த்திகேயன், த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். ராதிகா, சரத்குமார், சிவகார்த்திகேயன், லிஸ்ஸி ஆகியோர் இணைந்து எடுத்துக் கொண்ட ஜாலியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பையில் பெரிய பண்டிகைகளை சினிமா பிரபலங்கள் ஒன்றாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவில் அது அரிதாகவே இருந்து வந்தது. அந்த குறையை போக்கும் வகையில் ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார் கோலிவுட் நட்சத்திரங்களை ஒன்றாக திரட்டி கிறிஸ்துமஸ் பார்ட்டியை நடத்தியுள்ளனர்.

யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக நடிகை த்ரிஷாவும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டார். சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகும் ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா நடித்துள்ளதால், அவர் இந்த விழாவில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நீலம்பரி ரம்யா கிருஷ்ணனும் கலந்து கொண்ட நிலையில், ‘டியூட்’ படத்தை நினைவூட்டும் வகையில் சரத்குமார் செம ஜாலியாக பார்ட்டி கொண்டாடிய காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!