சிகரெட் விலை கடும் உயர்வு – ரூ.2 முதல் ரூ.850 வரை விற்பனை!
தமிழ்நாட்டில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. சில வகை சிகரெட்டுகள் ரூ.2 முதல் ரூ.850 வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு புகையிலை பயன்படுத்துபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரி உயர்வு மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக இந்த விலை மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிகரெட் மட்டுமின்றி, புகையிலை, பீடி உள்ளிட்ட பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடைகளில் புதிய விலையுடன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விலை உயர்வு காரணமாக விற்பனை குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர். அதே நேரத்தில், பொதுமக்கள் மத்தியில் புகையிலை பயன்பாடு குறையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விலை உயர்வு தொடர்ந்து அமலிலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!