பகீர்... ஓசி சிகரெட் கேட்டு பெட்டிக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கு...   17 வயது சிறுவன் உட்பட 4  பேர் கைது! 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூவ் நகரைச் சேர்ந்த 55 வயது ஜோதி என்பவர் பசுவந்தனை சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு மது போதையில் கடைக்கு வந்த சில இளைஞர்கள் அவரிடம் ஓசியில் சிகரெட் கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். சிகரெட் தர ஜோதி மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரது தலை மற்றும் தோள்பட்டையில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜோதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் பாண்டியனார் மக்கள் இயக்கத்தினர் பசுவந்தனை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் பிடிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. பெட்டிக்கடைக்காரர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனிப்படை அமைத்துத் தேடி வந்த போலீசார், பாரதி நகரைச் சேர்ந்த 19 வயது மாடசாமி, 21 வயது மணிகண்டன், 20 வயது விஜய பாண்டியன் மற்றும் 17 வயது சிறுவன் என மொத்தம் 4 பேரைக் கைது செய்துள்ளனர். மது போதையில் ஓசி சிகரெட் கிடைக்காத ஆத்திரத்தில் ஒரு முதியவரை அரிவாளால் வெட்டிய இளைஞர்களின் செயல் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!