undefined

 தாய்லாந்து–கம்போடியா எல்லையில் மீண்டும் மோதல்… பெரும் பதற்றம்!  

 
 

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான நீண்டகால எல்லைப் பிரச்சனை மீண்டும் வெடித்துள்ளது. எல்லையில் உள்ள கோயில்களின் உரிமையை இரு நாடுகளும் கோரிவருவது மோதலுக்கு காரணமாக உள்ளது. கடந்த ஜூலை மாதம் எல்லை பிரச்சனை ஐந்து நாள் மோதலாக மாறி 43 பேர் உயிரிழந்தனர். அப்போது சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் தலைமையிலான பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது. எல்லைப் பகுதியில் தாய்லாந்து வான்வழி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் தாய்லாந்து வீரர் ஒருவர் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. பலர் காயம் அடைந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இரு தரப்பும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

கம்போடியா பாதுகாப்பு அமைச்சகம், டிசம்பர் 8 அதிகாலை தாய்லாந்து படைகள் தாக்குதல் தொடங்கியதாக குற்றம் சாட்டியுள்ளது. பதிலடி கொடுக்கவில்லை என்றும் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. இதற்கிடையில் எல்லைப் பகுதிகளில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையை விரும்பவில்லை என்றும், இறையாண்மை மீறலை ஏற்க முடியாது என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!