undefined

பிப்ரவரி 9ம் தேதி 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2, செய்முறைத் தேர்வுகள் ! 

 

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பாடத்திட்டப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதற்கிடையில், பிளஸ் 2 வகுப்பு மார்ச் 2–26, பிளஸ் 1 வகுப்பு மார்ச் 3–27, பத்தாம் வகுப்பு மார்ச் 11–ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும்.

இதற்குமுன், பிப்ரவரி மாதம் மாணவர்கள் செய்முறைத் தேர்வுகளை எழுத வேண்டும். பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9–14, பிளஸ் 1 வகுப்புக்கானவை 16–21, பத்தாம் வகுப்புக்கானவை 23–28-ம் தேதி நடத்தப்படும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் பெயர் பட்டியல்களை சரிபார்த்து, ஹால்டிக்கெட்டுகள் வழங்கும் பணியும் முடிக்கப்பட்டுள்ளது.

செய்முறைத் தேர்வுகளை நடத்த ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒரு அல்லது இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டு, அதிலேயே அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!