பள்ளியிலேயே முதலிடம் பிடித்த 12ம் வகுப்பு மாணவி... கை கொடுத்த நடிகர் கமல்ஹாசன்!
May 19, 2025, 13:54 IST
ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷோபனா. இவர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடன் சுமை காரணமாக மாணவி ஷோபனா அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.
இந்நிலையில் மாணவியின் கதையை சமூக வலைத்தளம் மூலம் அறிந்து கொண்ட நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஷோபனாவை சென்னைக்கு வரவழைத்துள்ளார். அங்கு கமல் பண்பாட்டு மையத்தின் சார்பாக மாணவி உயர் கல்வி தொடரவும், அவர் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகுவதற்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!