12ம் வகுப்பு மாணவி பாலியல் படுகொலை... தலை சிதைக்கப்பட்ட கொடூரம்... விளாத்திக்குளத்தில் பயங்கரம்!

 

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக நேற்று மாலை காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்ததாக தெரிகிறது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வசதி இல்லை. இதனையடுத்து அவசரமாக  அவர் காட்டுப்பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடத் தொடங்கினர்.  

மாணவியை காணவில்லை என உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் புகாரளிக்க கூறி அலைகழித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்நிலையில் வேடநத்தம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மாணவியின் சடலம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக மாணவியைத் தேடிச் செண்ற உறவினர்களிடம் இருந்து வந்த தகவலைத் தொடர்ந்து, பெற்றோர் அலறியடித்தபடியே காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன அதே மாணவியின் சடலம் என்பது செய்யப்பட்டது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக துண்டித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியின் தோள் பகுதியில் கீறல்களும், ஆடைகள் களைந்த நிலையிலும் இருந்துள்ளன.

இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டித்து மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இந்தச் சம்பவத்திற்கு திமுக எம்.பி., கனிமொழி மற்றும் பாஜக அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவீர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!