கதறி துடிக்கும் பெற்றோர்!! பள்ளி வேன் கவிழ்ந்து 7ம் வகுப்பு மாணவன் பலி!! 20 மாணவர்கள் படுகாயம்!!

 

சிவகங்கை மாவட்டம் சருகனேந்தல் பகுதியில் செயல்பட்டு வருகிறது பிரபல தனியார் பள்ளி. இந்த பள்ளியில் அக்கம் பக்கம் கிராமத்தில் இருந்து மாணவர்கள் பள்ளி பேருந்து மூலம் பள்ளிக்கு அழைத்து வரப்படுவர். வழக்கம் போல் இன்று காலையிலும் சென்ற பள்ளிப் பேருந்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 7ம் வகுப்பு மாணவர் ஹரிவேலன் சம்பவ இடத்திலேயே பலியானார்.  

இந்நிலையில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.  முதல் கட்ட தகவலின் படி  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு தீவிர  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு  வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  


இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விபத்துக்குள்ளானது பள்ளி வாகனமே இல்லை எனவும்,   அந்த வாகனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட வாகனம் எனவும்  சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர்  தெரிவித்துள்ளார்.  தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார். அத்துடன்   மாணவன் உயிரிழப்புக்கு காரணமான பள்ளி வாகனத்துக்கு அனுமதி பெறாததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தினசரி வரும் வழக்கமான ஓட்டுநருக்கு பதிலாக, வேறு ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  

சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஏரிக்கரை வழியே வாகனம் சென்றபோது, வேனின் டயர் பதிந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வேனுக்கு இன்று புதிய ஓட்டுநர் வந்ததால், விபத்து நிகழ்ந்ததும் ஓட்டுனர் தப்பி சென்றுள்ளார். அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் ஹரிவேலன் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம் செய்தது உறுதி செய்யபட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்