7ம் வகுப்பு மாணவி தோட்டத்துக்குள் பாலியல் பலாத்காரம்: 2 போ் கைது!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த 13 வயது சிறுமியை கரும்புத் தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம், முர்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி, 7-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்குத் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மணிகாந்த் தின்னிமணி மற்றும் ஈரண்ணா சங்கம்மன்னவர் ஆகிய இருவர், சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று, அருகிலுள்ள கரும்புத் தோட்டத்துக்குள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமி வீடு திரும்பிய பிறகு, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தாமதமாகப் பெற்றோர் முர்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மணிகாந்த் மற்றும் ஈரண்ணா சங்கம்மன்னவர் ஆகிய இருவரையும் வலைவீசித் தேடி கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!