எதிரிகளைச் சாம்பலாக்கும் கிளஸ்டர் குண்டு ஏவுகணை... வடகொரியா  அதிரடிச் சோதனை!

 

சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தனது ராணுவ பலத்தைக் காட்டும் வகையில் கிளஸ்டர் ரக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. 'வாசோங்-11 கா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தரைவழித் தாக்குதல் ஏவுகணை, எதிரிகளின் இலக்குகளைக் குறிவைத்துத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என அந்நாட்டு ஊடகங்கள் பெருமையுடன் அறிவித்துள்ளன. இந்தத் திடீர் சோதனையானது கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் ஒருமுறை பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள கிளஸ்டர் குண்டுகள், இலக்கை நெருங்கியதும் பல சிறு குண்டுகளாகச் சிதறி சுமார் 17 ஏக்கர் பரப்பளவை ஒரே நொடியில் சாம்பலாக்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது. வெறும் ஏவுகணை மட்டுமல்லாது, எதிரிகளின் மின்சாரக் கட்டமைப்பை முடக்கும் மின்னணு ஆயுதங்கள் மற்றும் ரேடார் கருவிகளை ஏமாற்றும் நவீனத் தொழில்நுட்பங்களையும் வடகொரியா ஒரே நேரத்தில் சோதித்துள்ளது. அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடந்ததாகக் கருதப்படும் இந்தச் சோதனைகள், நவீனப் போர்க்களத்தில் வடகொரியாவின் வளர்ந்து வரும் பலத்தை நிரூபிப்பதாக ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

வடகொரியாவின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்துள்ள தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள், இது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களைக் சுமந்து செல்லும் திறன் கொண்டவை என்பதால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவின் நகர்வுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும், மறுபுறம் இது போன்ற தொடர் ஏவுகணைச் சோதனைகள் மூலம் கிம் ஜாங் உன் உலக நாடுகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்