undefined

  முதல்வர் ஸ்டாலின் 5,650 பயனாளிகளுக்கு ஹஜ் மானியம் வழங்கினார்!

 

2024-25ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில், முதன்முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் மானிய தொகை 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, இந்தாண்டு தமிழ்நாடு அரசால் ரூ.14 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயணி ஒருவருக்கு ரூ.25,000 வீதம் 5,650 பயனாளிகளுக்கு இம்மானிய தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 10 பயனாளிகளுக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலா ரூ.25,000க்கான காசோலைகளை ஹஜ் மானிய தொகையாக வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நாசர், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவரும், எம்எல்ஏவுமான அப்துல் சமது, பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் விஜயராஜ் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?