undefined

இன்று எளிமை ஆளுமை திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

 

இன்று மே 29ம் தேதி காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எளிமை ஆளுமை திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரசு செயல்பாடுகளைத் திறம்பட மேம்படுத்துவதோடு, குடிமக்களுக்குத் தேவையான சேவைகளை ஆன்லைன் மூலம் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தத் திட்டத்தின் மூலம் சுகாதாரச் சான்றிதழ், பொது கட்டிட உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி உரிமம், மகளிர் இல்லங்களுக்கான உரிமம், சொத்து மதிப்பு சான்றிதழ், முதியோர் இல்லங்கள் உரிமம், நன்னடத்தை சான்றிதழ், அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ் ஆகியவை பெற முடியும்.

அதேபோல், பொதுமக்கள் எளிதில் அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆன்லைன் மூலம் பெறும் வகையில் இந்த திட்டம் சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது