சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து… பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!
மேகாலயா மாநிலம் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம் தங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத ‘எலி வளை’ நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது. கடந்த வியாழக்கிழமை அங்கு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் தொழிலாளர்கள் பலர் சுரங்கத்தில் சிக்கினர்.
இந்த நிலையில் நடைபெற்று வரும் மீட்பு பணியில் நேற்று மேலும் 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் காணாமல் போயிருப்பதால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!