கொச்சின் ஷிப்யார்டு கப்பல் தகவல் பாகிஸ்தானுக்கு கசிந்தது.. 2 தொழிலாளர்கள் கைது!

 
 

மத்திய அரசு நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டில் கடற்படைக்குத் தேவையான போர் கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு கப்பல்கள் தயாராகி வருகின்றன. கொச்சி மற்றும் உடுப்பி கப்பல் கட்டும் தளங்களில் இந்த பணிகள் நடந்து வரும் நிலையில், கப்பல்களின் திறனைச் சேர்ந்த ரகசிய தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசியப்படுவதாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டு, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரோகித் (29), சாந்திரி (37) ஆகியோரை கைது செய்துள்ளனர். ரோகித் கொச்சி தளத்திலும், சாந்திரி உடுப்பி தளத்திலும் பணியாற்றி வந்த நிலையில், இருவரும் பணத்திற்கு பேர்பட்டு ரகசிய தகவல்களை ஐஎஸ்ஐக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியிருந்தது கைது மூலம் வெளிவந்துள்ளது.

கடற்படை தொடர்பான அதிவிசேஷ ரகசிய தகவல்கள் வெளிநாட்டுக்கு சென்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!