undefined

கழுத்து அறுக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட தேங்காய் வியாபாரி... பெரும் பரபரப்பு!  

 
 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஆலம்பாடி காவிரி ஆற்றில் ஒரு ஆண் சடலம் மிதந்து வந்தது. கைகள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் சடலம் இருந்தது. நீலகிரி தோப்பு வனப்பகுதியில் அந்த உடல் கரை ஒதுங்கியது. சடலத்தைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த நபரின் உடலை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியைச் சேர்ந்த ருத்ராட்ச ராவ் (35) என்பது தெரியவந்தது.

ருத்ராட்ச ராவ் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். முதல் கட்ட விசாரணையில் ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. ருத்ராட்ச ராவ் ஒரு பெண்ணைக் கேலி செய்துள்ளார். மேலும் பணப் பிரச்சினையும் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் அவரைக் கொலை செய்துள்ளனர்.

கடந்த 5-ம் தேதி, மூன்று பேர் ருத்ராட்ச ராவை மது அருந்த அழைத்துள்ளனர். ஒகேனக்கல் ஆலம்பாடி நீலகிரி தோப்பு என்ற இடத்தில் அனைவரும் சேர்ந்து மது அருந்தினர். போதை ஏறியதும் மூவரும் சேர்ந்து ருத்ராட்ச ராவை கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். பிறகு கைகளைக் கட்டி ஆற்றில் வீசியுள்ளனர். இந்தக் கொலையில் முருகேசன் (49), நாகராஜ் (45), மூர்த்தி (35) ஆகிய மூவரையும் ஒகேனக்கல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரணை தொடர்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!