undefined

 டெல்லியில் நடுக்க வைக்கும்  குளிர்...  பொதுமக்கள் கடும் அவதி! 

 
 

டெல்லியில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸாக பதிவானது. நடப்பு குளிர்காலத்தில் இதுவே மிகக் குறைந்த வெப்பநிலை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மூடுபனியுடன் கூடிய குளிர் அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இதேபோன்ற கடும் குளிர் நிலவி வருகிறது.

மலைப்பிரதேசங்களான இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் பகுதிகளில் உறைபனியும் காணப்படுகிறது. கடும் குளிர் மற்றும் மூடுபனி காரணமாக விமானங்கள், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. அதிகாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் பயணம் செய்ய பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!