கால்பந்து விளையாடிய கல்லூரி மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!
விளையாட்டுப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவி, கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தவர் திவ்யதர்ஷினி (17). இந்நிலையில் கல்லூரி மைதானத்தில் சக மாணவர்களுடன் திவ்யதர்ஷினி கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக அவர் திடீரென நிலைதடுமாறி மயங்கி விழுந்தார்.
மாணவி மயங்கி விழுந்ததைப் பார்த்த சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி திவ்யதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!