கல்லூரி மாணவி கொலை வழக்கு ... தப்பியோடிய ஒருதலைக் காதலன் மும்பையில் கைது!
கேரள மாநிலம் கோழிக்கோடு குதிரவட்டம் மனநலக் காப்பகத்திலிருந்து தப்பியோடிய கொலைக் குற்றவாளியை, மூன்று மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு தனிப்படை போலீசார் மும்பையில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினீஷ் வினோத் (26), எலம்குளம் பகுதியைச் சேர்ந்த திரிஷியா (21) என்ற மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வினீஷ், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி திரிஷியாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வினீஷ், அங்கு பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, கோழிக்கோடு குதிரவட்டம் மனநலக் காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் ரகசியமாகத் தப்பியோடினார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கோழிக்கோடு போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வினீஷ் மும்பையில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் மும்பை விரைந்தனர். அங்குள்ள உள்ளூர் போலீசார் உதவியுடன் பதுங்கியிருந்த வினீஷ் வினோத்தை மடக்கிப் பிடித்தனர். கைதான அவரை கேரளா அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!